ஒரு நாடோடிக் கதை,
இரண்டு ஏழை விவசாயிகள் இரவு நேரம் .புல்வெளியில் படுத்திருந்தார்கள். அப்படியே நீலவானத்தையும் ,அங்கு கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு நேரந்தான் வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது.
எதாவது பேச வேண்டுமே. ஒருவர் சொன்னார்
“இந்த வானமே ஒரு புல்வெளியாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். “
அடுத்தவர் சொன்னார்
“இத்தனை நட்சத்திரங்களும் ஆடுகளாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்” அவர் ஆடு வளர்ப்பவர் போலும்.
முதலாமவர் சொன்னார்
“அப்படியாக இருந்தால் உனது ஆடுகளை என் புல் வெளியில் மேய விடமாட்டேன்.”
“அதெப்படி நீ சொல்லமுடியும் -- - “ இரண்டாமவர்
வார்த்தைகள் தடித்தன. வாக்கு வாதம் முற்றிக் கட்டிப்புரண்டார்கள்.
வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இவர்களைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தன.
- வால்மீகி இராமாயணம் எழுதப்பட முன்பு, வட இந்தியாவில் பலவிதமான இராமயணக்கதைகள் நாட்டுபுறக் கதைகளாக உலவி வந்தன. சில கதைகளில் இராமனும் சீதையும் சகோதரனும் சகோதரியும் என்று கூட இருந்ததாம்.
இந்த வேறுபட்ட கதைகளையெல்லாம் சேர்த்து ஒழுங்குபடுத்தி தொகுக்கப்பட்டதே வால்மீகி இராமாயணம். இந்தக் கருத்தை ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரியரும் தான் எழுதிய 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
வான்மீகி ராமாயணத்தை தமிழ் நாட்டு பண்பாட்டுச் சூழலுக்கு இசைவாக மாற்றிக் கம்பனால் எழுதப்பட்டதே 'கம்பராமாயணம்'.
இரண்டு இராமாயணத்தின்படியும் இராவணன் பிராமணரான புலஸ்திய முனிவரின் மகன். அதேவேளை இராமன் சத்திரியன, பிராமணனல்ல.
ஆனால் இன்று ராவணனை தமது பிரதிநிதியாகவும் ராமன் ஆரிய(பிராமாண?) பிரதிநிதியாகவும் கருதி மல்லுக் கட்டுபவர்களைப் பார்க்கையில் என்ன சொல்லுவது?