Monday, 1 October 2018

திருத்தலங்களும் நம்பிக்கைகளும் -2

கச்சத்தீவும் உயிர்ச்சூழலும்.
(courtesey indosri)

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா மிகப் பிரசித்தம். மார்ச் மாதத்தில் நடக்கும் இரண்டு நாள் திருவிழாவிற்கு போக ஒரு மாதத்திற்கு முன்பே ஊர் தயாராகத் தொடஙகி விடும். தேங்காயெண்ணை தகரஙகள், sovereign barsoap, foreign barsoap எல்லாம் மெல்ல மெல்ல கடைகளில் அடுக்கப்படும்.
கச்சத்தீவு க்கு போக ஆசைப்படும் சிறுவர்களுக்கு ஆச்சி சொன்ன அறிவரைக்கதை;
கச்சதீவில் பல்லி,ஓணான்,வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரினங்கள் விதவிதமான நிறங் ககளில் இருக்கும் . அதைப்பார்த்து ஆசைப்பட்ட இரண்டு பேர் ,இருதீப்பெட்டிகளுக்குள் பல்லியொன்றையும், வெட்டுக்கிளியொன்றையும் பிடித்து அடைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பும் படகில் ஏறிவிட்டனர். படகு கச்சத்தீவை விட்டுக் கிளம்பி சிறிது தூரம் வந்ததும் ,மேற்கொண்டு நகரமுடியாமல் நின்று விட்டது. படகோட்டிகள் என்னவெல்லாம் செய்தாலும் படகை இயக்க முடியவில்லை. இறுதியில் படகின் பாய்ச்சீலையை இறக்கி சுருட்டிய படகோட்டி பயணிகளை கேட்டார். "உங்களில் யாரோ கச்சதீவிலிருந்து எடுக்கக் கூடாத எதையோ எடுத்து வந்து விட்டீர்கள், தயவுசெய்து அதை திரும்ப அந்தோனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால்தான் படகு நகர முடியாமல் நின்று விட்டது. நாம் ஊர் போக வேண்டுமென்றால் எடுத்தவர்கள் உண்மையைச் சொல்லுங்கள் "

கச்சதீவிலிருந்து கோழியவரை, வீணாலைக்கிழஙகு கொண்டு வரலாம். உயிர்ப்பிராணிகளைக் கொண்டு வரக்கூடாது. பல்லியையும்,வெட்டுக்கிளி யையும் பிடித்து வந்தவர்கள் பயந்து போய் உண்மையைச் சொல்லி இரண்டு நெருப்பெட்டிகளையும் கொடுத்தார்கள். பல்லியை ஒரு மரக்கட்டையில் வைத்து கச்சதீவுக்கரையை நோக்கித் தள்ளி விட்டார்கள். வெட்டுக்கிளியை பாய்மரக் கம்பத்திலேறி பறக்க விட்டார்கள். அதன் பின்பு படகு ஊரை நோக்கிப் புறப்பட்டது.
இந்தக்கதையை சொல்லி கச்சதீவிலிருந்து உயிரினங்களை கொண்டு வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை விடப்பட்டது.

கச்சத்தீவு மனித நடமாட்டம் இல்லாத பற்றைக்காட்டுப் பகுதி. அங்குள்ள உயிரினங்களில் ,ஆபத்தான கிருமிகள்(harmful microbes) இருக்கலாம். அவற்றை மனிதர்கள் வாழும் இடங்களிற்கு கொண்டு வந்தால் நோய்கள் ஏற்படுவதுடன், உயிர்ச்சமனிலையும் பாதிக்கப்படலாம்.

இதற்காகவே நெருப்பெட்டியிலடைத்த பல்லியும் வெட்டுக்கிளியும் கதை. இன்றைக்கு இரட்டை டிசல் இன்ஜின் பூட்டிய படகில் தப்பி வரலாம் என வீரம் பேசலாம். ஆனால் நச்சுயிரிகளை ஊருக்குள் கொண்டு வர யாரும் விரும்ப மாட்டார்கள்.

உயிர்ச்சமனிலையைப் பாதித்த நாகதாளிக் கதை யுண்டு. அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

                                                     .. . . தொடரும்