திரைகடலோடி மீள்பவரின் திசைமாறிய பயணம்.
எனது ஊருக்கு அருகில் உள்ள சிறு கிராமம் அங்கு வசிக்கும் ஒரு சிறு சமூகம் ஆதிகாலத்திலிருந்தே திரைகடலோடித் திறன் பெற்ற சமூகம்.
தமிழர் என்ற பெயரே அந்த சமூகத்தின் பெயரிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது அந்த அளவுக்கு பெருமை பெற்ற கடலோடிச் சமூகம்.
அவர்கள் சிறந்த கடலோடிகள் அவர்களின் சிறிய படகை மச்சுவாய் என்றும் அழைப்பார்கள்.படகில் பாய்விரித்து காற்றின் திசையிலும்,அல்லது காற்றுக்கு எதிர்த் திசையிலும் படகை செலுத்தும் திறமையாளர்கள். எனது ஊரவர்கள்1940 -50 காலம் இக்கரையில் நின்று வெள்ளைக்கொடி( சால்வை/வேட்டி)
அசைத்து அவர்களை அழைத்தால் உடனே வந்து எம்மவரை ஏற்றிக்கொண்டு 10 மைல் நீளமுள்ள கடலைக் கடந்து நமது ஊருக்கு கொண்டு சேர்த்துவிட்டு பின்பு தங்கள் ஊருக்கு மீண்டு விடுவார்.அந்தளவுக்கு துணிச்சலும் கடலோடும் திறனும்,
உதவும் பண்பும் கொண்டவர்கள்.
இந்த சமூகத்தில் முத்தண்ணன் அவர்களுக்கு ஒரு தலைவர் போன்றவர் முத்தண்ணன் பொருளாதாரத்திலும் கொஞ்சம் மேம்பட்டிருந்தார். அவர் தன்னுடைய நாட்டு படகை வைத்திருந்து காலத்தை கழித்து வந்தார் அதில் இருந்து கிடைத்த வருமானத்தை சேர்த்து ஒரு இயந்திர படகு வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார். இந்நிலையில் பிறரிடம் கடனும் வாங்கி இயந்திர படகு ஒன்றை கொள்வனவு செய்தார் . அந்தப் படகின் துணையுடன் சிறிது காலம் மீன்பிடித் தொழிலிலும்,சரக்குப் போக்குவரத்திலும் ஈடுபட்டார். ஆயினும் வருமானம் பெரிய அளவில் இல்லாததால் சிலர் வருமானத்தை அதிகரிக்கும் தொழில் ஒன்றை ஆலோசனை சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன ஆலோசனை- தமிழ்நாட்டில் இருந்து கடத்தல் செய்வது அண்ணனுக்கும் அந்த யோசனை சரியாகப்பட்டது படகு வாங்கிய கடனை விரைவாக அடைக்க இந்த ஒரு வழியை செய்து பார்க்கலாம் எனவும் நம்பினர் இதனால் ஏதோ ஒரு விதமாக ஒரு தொடர்பை பிடித்து கடத்தல் தொழிலில் ஈடுபட முதலாவது பயணம் வெற்றிகரமாக முடிந்தது முதல் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பயணத்திலும் ஈடுபட்டார் ஆனால் நிலைமைகள் தவறாகிவிட்டது படகும் அதில் சென்ற தொழிலாளர்களும் வீடு திரும்பவே இல்லை பல நாட்கள் பாக்கு நீரிணையில் தேடுதல் நடத்திய எதுவும் தடயமுமின்றி எல்லாம் மறைந்து போயின.
கடல் பயணம் ஆபத்துக்கள் நிறைந்தது. ஆனாலும் அவற்றையும் காலங்காலமாக பரம்பரை அறிவைக்கொண்டு மீண்டு வந்தவர்கள் இந்த கடத்தலில் காணாமல் போனார்கள்.
ஆனால் இங்கு உள்ள நம்பிக்கை இந்த கடலை மணிமேகலா தெய்வம் அல்லது அதுபோன்ற ஒரு தெய்வம் காத்து நிற்பதாக ஒரு நம்பிக்கை.
கடலில் உள்ள அத்தனை செயல்களும் ஏதோ ஒரு தெய்வம் அது அம்மனாக இருக்கலாம், அந்தோனியார் ஆக இருக்கலாம். யாராக இருந்தாலும் ஒரு தெய்வம் கடலைப் பார்த்துக் கொண்டு இருக்கிற.து
கடலை பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கை மக்களின் மனதில் அடி ஆழத்தில் பதிந்து இருக்கிறது
யாராக இருந்தாலும் இந்த கடலில் உள்ளவர்கள் அநீதியான செயல்களை- சமூகவிரோத செயல்களை செய்வதை கடற்றாய் பொறுப்பதில்லை. இந்த மக்கள் நலனுக்காக எதையுமே இக்கடலில் மீதாக செய்து வரலாம் ஆனால் மக்கள் நலனுக்கு எதிராக ஒரு சிறு கல்லைக் கூட வீசி எறிய கடல் அனுமதிப்பதில்லை
கடத்தல் தொழிலில் ஈடுபட நினைத்து இந்தோனேசியாவில் கரையில் சடலமாக ஒதுங்கிய சம்பவங்கள் உண்டு.
குமுதினிப் படகில்
கொலையுண்டோரையும், காயம்பட்டோரையும் கரைக்கு கொண்டு சேர்க்க கடலன்னையின் கருணையே காரணம்.
பயணிகள் விமானத்தை தகர்ப்பதற்கு கல்லைக்கூட கடத்தி வர முடியாது ஆனால் மக்களை காப்பதாக ‘கொன்கோர்ட் விமானத்தை’ கூட கடத்திக் கொண்டு வர கடலம்மா சம்மதிப்பாள்- ஆச்சரியமான உண்மை.
ஆனால் இது ஒரு நம்பிக்கை என்றாலும் உண்மை கடல் என்றும் மக்களை மக்கள் நலனை கைவிட்டதில்லை மக்கள் நலன்-நம்பிக்கைகளை உதாசீனப்படுத்துபவரை கடலும் உதாசீனப்படுத்தி உள்ளது. இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் பொருத்தமற்றதாக இருக்கலாம் ஆனாலும் நடைமுறையில் இதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன நிகழ்வுகள். இயற்கையை அறிந்து,அதனுடன்
ஒன்றிவாழ நம் முன்னோர் நம்பிக்கை என்ற பெயரில் தமது அனுபவ அறிவைத் தந்துள்ளனரோ.!
